Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

திடீரென புகுந்த காட்டுயானைகள்…. அச்சத்தில் கிராமமக்கள்…. வனத்துறையினரின் முயற்சி…!!

காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் அருகே புஞ்சைகொல்லி கிராமத்தில் ஏராளமான கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காட்டு யானைகள் திடீரென ஊருக்குள் புகுந்து குடியிருப்புகளை முற்றுகையிட்டது. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளுக்குள் பதுங்கினர்.

இதனால் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் தென்னை. வாழை மரம், பாக்கு மரங்கள் போன்றவற்றை சேதப்படுத்தியது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு காட்டுயானைகளை விரட்டினர்.

Categories

Tech |