மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு அமைத்து இருந்தது. அதன் அறிக்கை நேற்று தமிழக சட்டமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கொடுத்த வாக்குமூலத்தில் இருப்பதாவது,
கடந்த 2016 நவம்பர் இறுதி வாரத்தில் இதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சமீன் சர்மா என்பவர் அக்கா ஜெயலலிதாவை வந்து பார்த்துவிட்டு, பின் அப்பல்லோ மருத்துவ குழுவினர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின் எப்போதும் வரக்கூடிய AIIMS மருத்துவக் குழுவினர் வந்தனர். இவர்கள் அக்காவை பார்த்த பின் என்னை சந்தித்து பேசியதாவது, முதல்வர் நன்றாக நலமடைந்துள்ளார். அவரது மன திடமே இந்த முன்னேற்றத்திற்கு காரணம்.
இனி அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று என்னிடம் கூறினார்கள். இந்நிலையில் 04/12/2016 அன்று மாலை திடீரென அக்கா அவர்களின் நாக்கு ஒரு பக்கமாக துறுத்த, பல்லை கடித்துக்கொண்டே அக்கா அவர்கள் ஏதோ சத்தமிட்டார். உடனே நான் அக்கா அக்கா என கூச்சலிட்டேன். பின் அக்கா ஜெயலலிதா என்னை பார்த்துக்கொண்டே படுக்கையில் சாய்ந்தார். உடனடியாக அங்கிருந்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை கொடுத்த ஆரம்பித்தனர்.