தீ விபத்து ஏற்பட்டதால் வேன் முழுவதும் எரிந்து நாசமானது.
சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி பிள்ளையார் கோவில் தெருவில் கோதண்டம்(38) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான டெம்போ வேன் நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் வீட்டிற்கு எதிரே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை திடீரென வேன் தீப்பிடித்து எரிந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த கோதண்டம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு வேனில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் வேன் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.