அமெரிக்காவில் திடீரென நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் படுகாயமடைந்துள்ளார்கள்.
அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் மாநிலத்தில் வேன் நெஸ் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் திடீரென இன்று நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் படுகாயமடைந்துள்ளார்கள்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறை அதிகாரிகள் துப்பாக்கி சூடு நடந்த பகுதியில் அதனை செய்த நபரை தேடி தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளார்கள்.
அந்த நபர் அப்பகுதியிலேயே மறைந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அங்கு அதிகளவில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.