Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திடீரென தீப்பிடித்த வீடு…. பெரும் சேதம் தவிர்ப்பு…. அதிகாரிகள் நேரில் சென்று பார்வை….!!

மின் கசிவு ஏற்பட்டு வீடு திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை அடுத்துள்ள முள்ளிமுனை பகுதியில் ராக்கம்மாள் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று இவரது ஓட்டு வீட்டில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை உடனடியாக அணைத்துள்ளனர்.

இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் இதுகுறித்து தகவலறிந்த வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் ராக்கம்மாள் வீட்டை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். இதனையடுத்து வீட்டின் சேதத்தை பார்வையிட்டு அரசு நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |