மீனவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குளச்சல் அருகே கோடிமுனை பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சதீஷின் பெற்றோர் அருகிலிருக்கும் ஆலயத்திற்க்கு வழிபாட்டிற்காக சென்றுள்ளனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த சதீஷ் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குத்துளிள்ளார்.
இவருடைய அலறல் சதத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் சதீஷை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.