Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திடீரென தடம் புரண்ட சரக்கு ரயில்…. உஷாரான இன்ஜின் டிரைவர்…. பெரும் பரபரப்பு…!!!

திருப்பூர் ரயில் நிலையத்திற்கு நேற்று முன் தினம் வட மாநிலத்திலிருந்து கோதுமை மூட்டைகளுடன் சரக்கு ரயில் வந்தது. குட்ஷெட் பகுதியில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டு கோதுமை மூட்டைகள் இறக்கப்பட்டது. அதன் பிறகு ரயில் ஈரோடு நோக்கி புறப்பட தயாரானது. இதனையடுத்து நள்ளிரவு 1 மணிக்கு சரக்கு ரயில் எஞ்சினை மட்டும் தனியாக டிரைவர் இயக்கினார். அப்போது எதிர்பாராத விதமாக ரயில் இன்ஜின் சக்கரங்கள் தடம் புரண்டது. இதனை கவனித்த டிரைவர் உடனடியாக என்ஜினை நிறுத்தினார்.

இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிக்க தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஈரோட்டில் இருந்து மீட்புரையில் என்ஜின் கொண்டு வரப்பட்டு தடம் புரண்ட என்ஜினை தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தும் பணி நடைபெற்றது. மேலும் அதிகாலை 3 மணிக்கு இந்த பணிகள் நிறைவடைந்து. அதன் பிறகு 4 மணிக்கு சரக்கு ரயில் அங்கிருந்து ஈரோடு புறப்பட்டது.

Categories

Tech |