Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென கொழுந்து விட்டு எரிந்த தொழிற்சாலை…. பொதுமக்கள் அளித்த தகவல்…. 7 மணி நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள்….!!!!

தொழிற்சாலையில்  பற்றி எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் 7 மணி நேரம் போராடி அனைத்துள்ளனர்.

கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலம்பாளையம் பகுதியில் தென்னை நார் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இந்த தொழிற்சாலை குடோனில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 7   மணி நேரம் போராடி தொழிற்சாலையில் பற்றி எரிந்து தீயை  அனைத்துள்ளனர்.

இந்த விபத்தில் தொழிற்சாலையில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த   பொக்லைன் எந்திரம், டிராக்டர் ஆகியவை எரிந்து நாசமாகியுள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |