Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“திடீரென குறைந்த கடல் நீர்மட்டம்” நீண்ட வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள்….!!!!

கடல் நீர்மட்டம் குறைந்ததால் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பகவதி அம்மன் கோவில், விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை போன்ற சுற்றுலா தளங்களில் தினந்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதைப்போல் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஆனால் காலை கடல் நீர் மட்டம் தாழ்வாக காணப்பட்டதால் காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கப்பட வில்லை.

இதனையடுத்து 3 மணி நேரத்திற்கு பிறகு 11 மணி அளவில்  நீர்மட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியது. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று படகில் ஏறி விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை போன்ற இடங்களுக்கு சென்றுள்ளனர். மேலும் கடந்த சில நாட்களாக கடல் நீர்மட்டம் காலையில் உள்வாங்கி காணப்படுவதும், சிறிது நேரம் கழித்து  இயல்பு நிலைக்கு வருவது  குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |