பெண் வேனில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தீப்பெட்டி ஆலையில் மதுரையை சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தினமும் வேலைக்கி வேனில் சென்று வருவது வழக்கம். அதேபோல் நேற்று பணியை முடித்துவிட்டு தொழிலார்கள் வேலூர் சாலையில் வேனில் வந்து கொண்டிருந்தனர் . அப்போது திடீரென மகேஸ்வரி வேன் கதவை திறந்து வெளியே குதித்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஓட்டுனர் உடனடியாக வேனை நிறுத்தியுள்ளார்.
இந்நிலையில் படுகாயமடைந்த மகேஸ்வரியை சக பணியாளர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மகேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மகேஸ்வரி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.