Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்…. 5 பேர் பலி…. 50 பேர் படுகாயம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

திடீரென ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், 5 பேர் பலியானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஈரானில் உள்ள வளைகுடா பகுதியில் ஹர்மொஸ்கன் மாகாணம் அமைந்துள்ளது. இங்கு இன்று அதிகாலை 1:30 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியது. இந்த நிலநடுக்கத்தினால் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்பிறகு 50 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்கும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |