தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பெண் தொழிலாளி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான அலுமினிய தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் மாலை நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் கூரைகுண்டு கிராமத்தை சேர்ந்த பெண் தொழிலாளியான சுடர் என்பவர் படுகாயமடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். அதன்பின் படுகாயமடைந்த தொழிலாளியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.