வனப்பகுதியில் பற்றி எரிந்த காட்டுத் தீயை அணைக்கும் பணியில் வன ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் கடுமையான வெப்பம் நிலவுவதால் புல்வெளிகள், செடி கொடிகள் காய்ந்து வருகின்றன. இந்நிலையில் மர்ம நபர்கள் தனியார் தோட்ட பகுதியில் தீ வைக்கின்றனர். இந்த தீ வருவாய்த்துறை நிலங்கள், தனியார் விவசாய நிலங்கள் மற்றும் வனபகுதியில் பரவி கொழுந்துவிட்டு எரிகிறது. நேற்று மாலை பெருமாள்மலை சரகத்திற்கு உட்பட்ட துப்பாக்கி மலை வனப்பகுதியில் காட்டு தீ ஏற்பட்டுள்ளது.
இதில் பல ஏக்கர் பரப்பளவிலான மூலிகைச்செடிகள் மற்றும் அரியவகை மரங்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்குள்ள வனவிலங்குகள் வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து செல்கின்றன.