Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட காட்டுத்தீ…. எரிந்து நாசமான அரியவகை மரங்கள்…. ஈரோட்டில் பரபரப்பு…!!

காட்டுத்தீ ஏற்பட்டதால் அரியவகை மரங்கள் எரிந்து நாசமானது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில மாதங்களாக வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் உணவு மற்றும் தண்ணீரை தேடி வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்கிறது. இந்நிலையில் அரேப்பாளையத்தில் இருந்து கேர்மாளம் செல்லும் சாலையில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டு மளமளவென அனைத்து இடங்களுக்கும் பரவியது. இந்த தீயில் அரியவகை செடிகள் மற்றும் மரங்கள் எரிந்து நாசமாகிவிட்டது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |