அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் இன்று திடீரென கடல் 200 மீட்டருக்கு உள்வாங்கியுள்ளது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அச்சத்துடன் கடலை பார்த்து வருகின்றனர். அதனால் கடலின் அடியில் இருக்கக்கூடிய பாறைகளை தற்போது காண முடிகின்றது. கடலில் நீராடுவதற்கு வந்த ஒரு சிலர் இந்த பாறைகளின் மீது ஏறி நின்று செல்பி எடுத்து வருகிறார்கள்.
கடந்த அமாவாசை அன்று இதனைப் போலவே திருச்செந்தூரில் 100 அடி தொலைவுக்கு உள்வாங்கிய நிலையில் தற்போது மேலும் உருவாகியுள்ளது. இது பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.