பனிச்சரிவில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இங்குள்ள ஆல்ப்ஸ் பனிமலை தொடரில் மார்மலோடா சிகரம் அமைந்துள்ளது. இந்த சிகரமானது கடும் வெப்பத்தின் காரணமாக திடீரென உருகியுள்ளது. இந்த பனிமலை சரிவின் காரணமாக மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பனிமலை சரிவில் மலையேற்றத்திற்காக சென்ற குழுவினர் சிக்கிக் கொண்டுள்ளனர். இதில் 6 பேர் உயிரிழந்ததாகவும், 8 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் பனிச்சரிவில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் மீட்கும் முயற்சியில் பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.