Categories
தேசிய செய்திகள்

திடீரென இடிந்து விழுந்த சுவர்…. இடிபாடுகளில் சிக்கி 4 பேர் பலி, 8 பேர் படுகாயம்….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டாவில் இன்று குடியிருப்பு வளாகத்தின் சுற்றுச்சூழல் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.அந்த சுவற்றின் அருகில் இருந்த பலரும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் இடிபாடுகள் அகற்றப்பட்டு அதில் சிக்கியவர்களை மீட்டனர்.

இருந்தாலும் நான்கு பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். மேலும் எட்டு பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.இடிபாடுகளில் சிக்கி அனைவரும் தொழிலாளர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

Categories

Tech |