அமெரிக்காவில் பிரபல மல்யுத்த வீரர் தான் பெண்ணாக மாறியதாக இணையத்தளத்தில் வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த Gabby Tuft(42). இவர் அமெரிக்காவில் மல்யுத்த விளையாட்டில் உலக புகழ்பெற்ற WWE ல் கடந்த 2009 வருடம் முதல் 2012 ஆம் வருடம் வரை Tyler Reks என்ற ரிங் பெயரில் விளையாடினார். இவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் Gabby தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்ட பதிவு அனைவரையும் கடும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
அதாவது அவர் தான் பெண்ணாக மாறிய புகைப்படம் ஒன்றை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவர் அதில் குறிப்பிட்டிருந்ததாவது, “இதுதான் நான். இத்தனை காலங்களாக உலகம் என்னை என்ன சொல்லும் என்ற அச்சத்தில் நான் மறைத்திருந்த எனது மற்றொரு பக்கம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கடந்த எட்டு மாதங்களாக அவர் தன் உருவத்தை சிறிது சிறிதாக மாற்றி வந்துள்ளார். இதற்கு தேவையான சிகிச்சைகள் பலவற்றை மேற்கொண்ட அவரை அவரது மனைவியும் குடும்பத்தினரும் ஏற்றுக்கொண்டார்களாம். தற்போது இவரின் இந்த துணிச்சலான முடிவை இணையதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.