ஹரியானா மாநிலத்தில் மழை பெய்தபோது மரத்துக்கு அடியில் நின்று கொண்டிருந்த 4 பேரை மின்னல் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
ஹரியானா மாநிலம் குருகிராம் என்ற பகுதியில் வீட்டு வசதி சங்கத்தில் நேற்று நான்கு தோட்டகலை ஊழியர்களை மின்னல் தாக்கியது. இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது. இந்த காட்சியை பார்க்கும் போது மழை பெய்து கொண்டிருந்தது. திடீரென்று ஒரு மரத்தின் மீது மின்னல் தாக்கியதில் முதலில் மூன்று பேர் சாய்ந்து விழுந்தனர். அதை எடுத்து ஒருவர் விழுந்தார். இதில் நான்கு பேரும் இறந்திருப்பார்கள் என்று தான் தோன்றும், ஆனால் அதிர்ஷ்டவசமாக 4 பேரும் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதால் தீக்காயங்களுடன் உயிர் பிழைத்தனர்.
இது அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்த காட்சி காண்பவர்களுக்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. 4 பேரும் ஒரே நொடியில் தரையில் வீழ்ந்து கிடப்பதை இதில் பார்க்க முடியும். பின்னர் அவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு 3 பேர் இப்போது ஆபத்தான நிலையில் இல்லை என்றும். நான்காவது ஒருவர் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
https://twitter.com/sheela2010/status/1370413703347142658