Categories
மாநில செய்திகள்

திடீரென்று அரசு பேருந்தில் ஏறி… பரபரப்பை கிளப்பிய முதல்வர் ஸ்டாலின் ….!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை 5 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த வாரம் பண்டிகை காலம் என்பதால் தடுப்பூசி முகாம் நடத்தப்பட வில்லை.இந்நிலையில் தமிழகத்தில் இந்த வாரம் ஞாயிற்றுக் கிழமைக்கு பதில் இன்று 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடந்து கொண்டிருக்கிறது.

இதனிடையே சென்னை கண்ணகி நகரில் கொரோனா தடுப்பூசி முகாமை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து விட்டு திரும்பும் வழியில் டிரைவரிடம் திடீரென்று காரை நிறுத்தச் சொல்லி இருக்கிறார். டிரைவருக்கு ஒன்றும் புரியாமல் காரை நிறுத்தியுள்ளார். உடனே காரை விட்டு இறங்கிய ஸ்டாலின் விறுவிறுவென்று அரசு பேருந்தில் ஏறி ஆய்வு செய்ததால், பாதுகாப்பிற்கு கூட வந்த அதிகாரிகள் சற்று நேரத்திற்கு திகைப்பில் ஆழ்ந்துள்ளனர். பேருந்தில் இருந்த மக்களும் முதல்வரை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

Categories

Tech |