ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான திடக்கழிவுகளை சாம்பலாக்கும் கருவி தஞ்சை அரசு மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் கழிவு பொருட்களை சுத்திகரிக்கும் நவீன கருவியானது ஒரு கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னாள் மருத்துவ மாணவர்கள் சங்கம் சார்பாக ரூபாய் 75 லட்சம், மாவட்ட நிர்வாகம் மற்றும் தஞ்சை மருத்துவக் கல்லூரி சார்பாக 25 லட்சம் கொடுக்கப்பட்டது.
மேலும் மருத்துவமனையில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகளை 300° முதல் 450° வெப்பத்தின் உதவியுடன் வெப்ப சிதைவு முறை மூலம் சாம்பலாக்கப்படுகின்றது. இதற்கு எரிபொருள் கிடையாது. வெப்பவுலை கிடையாது. புகை வராது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை கொடுக்காது. இக்கருவியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று தொடங்கி வைக்க கல்லூரி முதல்வர் டாக்டர் ரவிக்குமார் வரவேற்றார்.