சென்னை மாநகராட்சி பகுதியில் தேங்கியுள்ள திடக்கழிவுகளை மூன்று நாட்களில் அகற்ற சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் பெய்த கன மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தற்போது வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு சென்னை மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி வருகிறது. இருப்பினும் சாலையில் அடித்துச் செல்லப்பட்ட திட கழிவுகள் அனைத்தும் சாலைகளில் தேங்கி உள்ளதால், அவற்றை நீக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் தேங்கியுள்ள திடக்கழிவுகளை இன்னும் மூன்று நாட்களில் அகற்ற ஆணையர் ககன்தீப் சிங் உத்தரவிட்டுள்ளார்.
மழை நீர் தேங்கியுள்ளதால் பழுதான தெரு விளக்குகளை நாளைக்குள் சீரமைக்கவும், பொது இடங்களில் தேங்கியுள்ள மழைநீர், மரக்கிளைகள், தோட்டக்கழிவுகள் போன்றவை சரி செய்யப்படும். இதற்காக நகராட்சியில் இருந்து 600 பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர தூய்மை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.