பிரேசிலில் இன்று புதிதாக 90,303 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் உள்ள வுகான் நகரில் தோன்றியது. இதன் தாக்கம் சில மாதங்கள் குறைந்து வந்த நிலையில் தற்போது இரண்டாவது அலை தொடங்கியுள்ளது. இந்நிலையில் பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 90,303 பேர் புதிதாக வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இறப்பு எண்ணிக்கை 28,475 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,1693,838 ஆகவும் இறப்பு எண்ணிக்கை 284,775 அதிகரிதுள்ளது என பிரேசில் நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருந்த நிலையில் தற்போது அதனை பின்னுக்குத்தள்ளி பிரேசில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. 29 மில்லியனுக்கு அதிகமான மக்கள் பாதிக்கபட்டஅமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. மேலும் பிரேசிலில் தடுப்பூசி செலுத்தும் பணியில் இதுவரை 14.18 மில்லியனுக்கு அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என பிரேசில் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.