Categories
அரசியல் மாநில செய்திகள்

திக்கு திக்குனு இருக்கோம்….! அமெரிக்கா கூட சொல்லல…. நீங்க தான் அப்படி சொல்லுறீங்க …!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தேர்தல் ஆணையம் ஒரு நாடக குழு என்று தான் சொல்ல வேண்டும். அது எப்படி செய்கிறது என்றால் பறக்கும்படை என்று ஒன்று போடுகிறது. பறக்கும் படையை போட்டு சாலையில் 370 கோடி நாங்கள் எடுத்து விட்டோம் என்று சொல்லுது ? யாரிடம் என்றால் அப்பாவை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு பணம் கட்டிவிட்டு அழைத்துச் செல்லலாம் என்று சொல்கின்ற மகனிடம் வாங்குகிறது. கடைக்கு சரக்கு வாங்கி விட்டு வரலாம் என்று போவரிடம் பறித்துக் கொள்கிறது.

இந்த மாதிரி எடுக்கிறதே தவிர….. நான்கூட அன்றைக்கே சொன்னேன்…. காசு அங்கு கொடுக்கிறார்கள், அங்குபோய் பிடியுங்கள் என்று சொன்னேன். பணம் கொடுக்கிறார்கள் என்று தெரிகிறது, காணொளி வருகிறது எல்லாம் தெரிகிறது. ஆனால் கொடுத்தவர் மேல் பத்தாண்டு தேர்தலில் நிற்பதற்கு தடை என்று இரண்டு பேரை போட்டு இருந்தால் முடிந்திருக்கும், அதை செய்து. நாங்கள் தான் பெருமையா பேசிக்கொள்கிறோம் எண்ணியல் இந்தியா…. டிஜிட்டல் இந்தியா என்று  சொல்கிறோம்.

பட்டனை தட்டினால் எண்ணி சொல்ல போகிறது, இதுக்கு ஏன் 25 நாள் ஒரு இடத்தில் அடைத்து வைக்க வேண்டும். நீங்களே பார்த்திருப்பீர்கள்…. இப்பொழுது கோயம்புத்தூரில் வாகனத்தில் வந்து பெட்டியை ஏற்றிவிட்டு போகிறதையே பார்க்கிறோம். அப்பொழுது நான் விசாரித்தவரை என்னவென்றால் வேறு இடத்தில் வைத்து வாக்கை பதிவு செய்துவிட்டு….. தேர்தல் முடிந்த பிறகு யாருக்கு என்ன விழுக்காடு வாக்கு வந்திருக்கிறது என்று ஓரளவு கணித்து இருக்க முடியும். அப்பொழுது அந்த பெட்டியை வைத்துவிட்டு இந்தப் பெட்டியை எடுத்துட்டு போறது, இது நடக்கிறது.

அமெரிக்காவில்  50 மாகாணங்கள்,  ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒவ்வொரு நேர வித்தியாசம் இருக்கிறது. ஆனாலும் அது வாக்கு சீட்டு முறையில் வாக்கு பதிவு செய்து, இரவே கையோடு எண்ணி இரவோடு இவர் தான் அமெரிக்கவுடைய அதிபர்,  தலைவன் என்று பேசி விடுகிறது. அந்த நாடு கூட நாங்கள் டிஜிட்டல் அமெரிக்கா என்று பேசவில்லை. நீங்கள் தான் பெருமை பேசுகிறீர்கள். நாங்கள் ஸ்மார்ட்சிட்டி ஆகிவிட்டோம், டிஜிட்டல் இந்தியா ஆகிவிட்டோம், பணமில்லை பரிவர்த்தனை வந்துட்டோம்,  மொபைல் பரிவர்த்தனை வந்துட்டோம் இப்படி எல்லாம் பேசிவிட்டு,  கடைசியில் 25 நாள் பெட்டியை மூடி விட்டு, ஒவ்வொரு நாளும் திக்கென்று இருக்கின்றோம்.

Categories

Tech |