ஆப்கானிஸ்தான் நாட்டை தற்போது தாலிபான்கள் முற்றிலுமாக கைப்பற்றி விட்டனர். இதனால் தாலிபான் தலைமையிலான அரசு ஆப்கானை இன்னும் ஒரு சில நாட்களில் ஆட்சியமைக்கும் என்பதனால் அங்குள்ள மக்கள் தங்கள் உயிருக்கு பயந்து வெளிநாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். அவ்வாறு வெளியேறிய மக்கள் விமானங்களில் அடித்து பிடித்து ஏறும் வீடியோ வெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் ஆப்கான் மக்களுடைய நிலை குறித்து வருத்தம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் ஆப்கான் பிரச்சினைக்கு தீர்வு காண அரசியல், ராஜாங்க ரீதியிலான உதவிகளைச் செய்யவும் தேவைப்பட்டால் ஆட்சி அமைப்பதற்கு உதவி செய்யத் தயார் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அளித்துள்ளார். தீவிரவாதிகளின் புகலிடமாக ஆப்கான் அமைந்து விடக்கூடாது என்று தெரிவித்த அவர் தற்போது தாலிபான்களுக்கு உதவ தயார் என்கிறார்கள். இந்த ஆட்டத்தில் வாழ்வை தொலைப்பது அப்பாவி மக்கள்தான்.