ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜாம்போவாங்கா டெல் நார்டே மாநிலத்தில் பலிகுயியான் நகரில் சரக்கு மற்றும் சில்லறை பொருள்களை லாரி ஒன்று ஏற்றிக்கொண்டு சென்றிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த லாரி திடீரென சாலையில் இருந்து விலகி பள்ளத்திற்குள் விழுந்தது.
இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரனையில் லாரியில் பிரேக் சரியாக புடிக்காததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நடந்திருக்கலாம் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.