கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநரும், கிளீனரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டனர்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் இருந்து காய்கறி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கூடலூர் நோக்கி மினி லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்நிலையில் மினி லாரி மேல் கூடலூர் கிறிஸ்தவ ஆலயம் முன்பு சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் தாறுமாறாக ஓடிய மினி லாரி சாலையோரம் வீடுகள் இருந்த பகுதியில் கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் சரவணன், கிளீனர் முத்து ஆகியோர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பிவிட்டனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.