பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தாராபுரத்தில் விவசாயிகள் கருப்பு கொடி காட்டியும், கருப்பு பலூன்கள் பறக்கவிட்டும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். இந்த தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றது. இந்நிலையில் தமிழகத்தில் பிரச்சாரத்தை மேற்கொள்ள தாராபுரத்தில் பிரதமர் மோடி வருகை தந்தார்.
தாராபுரம் வருகை தந்த பிரதமர் மோடிக்கு எதிராகத் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவன தலைவர் வழக்கறிஞர் ஈசன் தலைமையில், மூன்று வேளாண் சட்டங்களை எதிராகவும் ரத்து செய்ய வேண்டும் , டெல்லியில் 125-வது நாளாக நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், தாராபுரம் பெரிய கடைவீதி அண்ணா சிலை அருகே விவசாயிகள் கருப்புக்கொடி காட்டடியும், கருப்பு பலூன்கள் பறக்கவிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமருக்கு எதிராக நடைபெற்ற இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. பிரதமர் வருகையையொட்டி, பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.