Categories
அரசியல் மாநில செய்திகள்

“தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்”….. இபிஎஸ்-க்கு போஸ்டர் மூலம் மறைமுக தூது…..!!!!!

தமிழகத்தில் அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது வரை பணி போராக இருந்த ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் மோதல் தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கட்சியின் தலைமை பதவியை யார் கைப்பற்றுவது என்ற போட்டியில் இருவருக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இபிஎஸ் படத்தை நீக்குவதும், இபிஎஸ் ஆதரவாளர்கள் ஓபிஎஸ் படத்தை நீக்குவதும் தொடர்கதையாகி விட்டது. மாறி மாறி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் திருச்சியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒட்டி உள்ள போஸ்டர் கவனம் ஈர்த்துள்ளது.உள்ளாட்சி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான படிவங்களில் கையெழுத்திட ஓபிஎஸ் முன்வந்தார். ஆனாலும் ஈபிஎஸ் அதற்கு மசியவில்லை. இந்த சூழலில் இரட்டை தலைமையை வலியுறுத்தி ஈபிஎஸ்-க்கு தூதுவிடும் வகையில் ஓபிஎஸ் -இபிஎஸ் படங்களுடன் “தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்”என்ற பாடல் வரிகளை போட்டு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

Categories

Tech |