Categories
மாவட்ட செய்திகள்

தாய் மகனுடன் சேர்ந்து எடுத்த விபரீத முடிவு…. கடன் தொல்லையால் ஏற்பட்ட சோகம்….!!

மயிலாடுதுறையில் தாய் மகன் இருவரும் சேர்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த சாந்தி என்பவர் தனது கணவனை பிரிந்து தன் மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார். அவர் பிழைப்புக்காக ஊழியக்காரன் தோப்பில் பெட்டி கடை ஒன்றை நடத்தி வந்ததோடு ஏலச்சீட்டுகளையும் நடத்தி வந்துள்ளார். இதனிடையே கடந்த சில மாதங்களாக தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக கடன் தொல்லைக்கு ஆளாகி பெரும் மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.

இதனிடையே நேற்று சாந்தியும், அவரது மகனும் வெகுநேரமாகியும் வீட்டைவிட்டு வராததால் அண்டை வீட்டுக்காரர்கள் திறந்து பார்த்த போது தாயும் ,மகனும் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து தாய் மகனின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |