Categories
தேசிய செய்திகள்

தாய் ஓட்டிய கார் மோதி 3 வயது சிறுமி பலி….பெரும் சோக சம்பவம்…..!!!!

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே தாய் ஓட்டிச் சென்ற கார் மோதியதில் மூன்று வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை கொடுவள்ளி அருகே ஈங்கம்புலாவை சேர்ந்த நசீர் மற்றும் நெல்லம் கண்டிகை சேர்ந்த லுப்னா பெபினி ஆகியோரின் மகள் மரியம் நசீர் (3) என்ற சிறுமி விபத்தில் சிக்கி பலியானார்.

வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மீது குழந்தையின் தாய் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியது.அதனால் பலத்த காயம் அடைந்த சிறுமியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிறுமி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Categories

Tech |