
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய 28 வயதான டனுஷோர்ன் என்ற நபரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவனிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவன், ‘‘சுட்டுக்கொல்லப்பட்ட பெண் என்னுடைய முன்னாள் மனைவி. அவள் வேறொரு ஆண் நபருடன் பழகி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்து நான் சுட்டுக் கொன்றுவிட்டேன் என வாக்குமூலம் அளித்தான். ஏற்கனவே இது போன்ற சம்பவம் நடந்த நிலையில், தற்போது வணிக வளாகத்தில் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பாங்காக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.