Categories
உலக செய்திகள்

தாய்லாந்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம்… ஒரே ஒரு குழந்தை மட்டும்… இது என்ன அதிசயம்…?

தாய்லாந்து நாட்டில் நோங் புவா லாம்பு என்னும் இடத்தில் குழந்தைகள் பராமரிப்பு மையம் ஒன்று செயல்பட்டுக் கொண்டிருந்தது. இங்கு நுழைந்த ஒரு நபர் குழந்தைகளை சரமாறியாக துப்பாக்கி சூடு நடத்தியும் கத்தியால் குத்தியும் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த பயங்கர சம்பவத்தில் 35 பேர் கொல்லப்பட்டனர் அவர்களில் 24 பேர் குழந்தைகள் என்பது பெரும் அதிர்ச்சியாக இருந்தது மீதமுள்ள 11 பேர் பராமரிப்பாளர்கள் ஊழியர்கள் போன்றவர்கள் ஆகும்.

ஆனால் இந்த சம்பவத்தில் ஒரே ஒரு குழந்தை மட்டும் உயிர் பிழைத்துள்ளது. இந்த கொடூர சம்பவத்தின் போது அந்த குழந்தை வகுப்பறையில் மூளையில் ஒரு போர்வையின் கீழ் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது. தன்னை சுற்றி இவ்வளவு பெரிய அசம்பாவிதம் நடந்து கொண்டிருப்பது அந்த குழந்தை அறியவில்லை. இது பற்றி அந்த குழந்தையின் தாயார் பேசும் போது பவீனுட் சுபோல்வோங் போர்வையால் முகத்தை மூடிக்கொண்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள் அது அவருடைய உயிரை காப்பாற்றி இருக்கலாம். கொலையாளி வெளியே போனபின் வகுப்பறையின் ஒரு மூலையில் அவள் இருந்ததை பார்த்திருக்கின்றார்கள்.

இந்த கத்தி குத்து சம்பவத்தில் 22 குழந்தைகளில் 11 குழந்தைகள் அவள் தூங்கிக் கொண்டிருந்த வகுப்பறையில் இறந்தவர்கள் ஆகும் மற்ற குடும்பங்களுக்காக நான் கவலையாக உணர்கிறேன். ஆனால் எனது குழந்தை உயிர் பிழைத்ததில் மகிழ்ச்சி அடைகின்றேன் இது சோகமும் நன்றியும் கலந்த உணர்வு என அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் இந்த கொலை வெறி தாக்குதலை நடத்தி 35 பேரை கொன்று குவித்தது மட்டுமல்லாமல் தனது மனைவி மற்றும் மகளையும் கொன்று தனது உயிரையும் மாய்த்து கொண்ட அந்த நபர் யார் என்பது தெரியவந்துள்ளது. அவர் பன்யா காப்பர்(34) என்பவர் ஆவார் அவர் நாவாங் போலீஸ் நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றியவர் என்பது தெரியவந்துள்ளது.

Categories

Tech |