கைக்குழந்தையுடன் பயணம் செய்யும் பெண்களின் வசதிக்காக ரயில்களில் குழந்தை படுக்கையை ரயில்வேதுறை அறிமுகப்படுத்தியுள்ளது .
நாள்தோறும் ரயில்களில் ஏராளமான மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். நீண்ட தூர பயணம் மேற்கொள்ளும் மக்கள் பேருந்துகளை காட்டிலும் ரயில்களை தேர்வு செய்கின்ற.னர். ஏனெனில் ரயில்களில் தூங்குவதற்கு வசதி உள்ளது. மேலும் கழிப்பறை வசதியும் உள்ளது இதனால் பலரும் ரயில்களில் பயணம் மேற்கொள்வதை அதிகம் விரும்புகின்றனர்.
இந்நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு கைக்குழந்தையுடன் பயணம் செய்யும் பெண்களின் வசதிக்காக ரயில்களில் குழந்தை படுக்கையை ரயில்வேதுறை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட ரயில்களில் மட்டும் கிடைக்கும் இந்த படுக்கை வசதிகள் பயணிகளிடம் இருந்து கிடைக்கும் வரவேற்பை பொருத்து அனைத்து ரயில்களிலும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி வடக்கு ரயில்வேயின் லக்னோ மற்றும் டெல்லி பிரிவுகளின் கூட்டு முயற்சியாகும். இது எப்படி பயன்படுத்துவது மற்றும் அதன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ரயில்வே துறை சார்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.