மத்திய அரசு பொதுமக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்களுக்காக பல திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான ஒன்று பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து நிதி உதவி திட்டம் ஆகும். அதாவது குழந்தை பெற்றெடுக்கும் தாய்மார்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கவும் அந்த குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் இந்த திட்டம் உதவிபுரிகிறது. 2017ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் தாய்மார்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கும் தாய்மார்களுக்கு மொத்தம் 5,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். இதில் முதல் தவணையில் ஆயிரம்ரூபாயும் , இரண்டாவது தவணைகளில் ரூபாய் 2000-ம் வழங்கப்படுகிறது. அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனை என எங்கு பிரசவம் நடந்தாலும் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. முதல் குழந்தைக்கு மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் நிதியுதவி கிடைக்கும். இதற்கு விண்ணப்பிக்க ஆதார் கட்டாயம். மேலும் வங்கி கணக்கு விவரங்களையும் வழங்க வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.