Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தாய்ப்பாலில் இருக்கும் புரதச்சத்து…”நம்ம இளநீர்ள இருக்கா”…? உண்மையாவா…? நீங்களே பாருங்க..!!

தாய்ப்பாலில் இருக்கும் புரதச்சத்து நாம் குடிக்கும் இளநீரில் உள்ளதாம். இதுகுறித்து தெளிவாக இந்த தொகுப்பில் நாம் பார்ப்போம்.

என்னது தாய்ப்பாலில் இருக்கும் புரதச் சத்து இளநீரில் உள்ளதா? கதை என்று நினைக்காதீர்கள். உண்மையில் இதில் அவ்வளவு சத்து உள்ளது. முதலில் இளநீருக்கு இளநீர் என்று எப்படி பெயர் வந்தது என்றால் ஒரு தென்னை மரத்தில் பூ பூத்து, தேங்காய் மாறுவதற்கு ஒரு வருடம் ஆகின்றது. அதில் ஆறிலிருந்து எட்டு மாதங்கள் காயை நாம் இளநீர் என்று கூறுகிறோம். இளந்தேங்காயில் இருக்கும் நீர் என்பது மருவி காலப்போக்கில் இளநீர் ஆக மாறிவிட்டது.

இளநீரில் இருக்கும் மருத்துவ குணங்கள்:

தாய்ப்பாலில் இருக்கும் புரதச் சத்து நம் இளநீரில் உள்ளது. இளநீர் எவ்வளவு குளிர்ச்சி என்பது அனைவருக்கும் தெரியும். வெயில் காலம் வந்துவிட்டது, இந்த காலத்தில் அனைவரும் இளநீரை பருகுவது என்பது உடல் உஷ்ணத்தை தணிக்கும். அம்மை போட்டவர்களுக்கு, சிறு குழந்தைகளுக்கு இளநீர் வாங்கிக் கொடுப்பது குழந்தைகளின் உடல் சூட்டை தனித்து ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காகத்தான். அதையும் தாண்டி நம் உடம்பில் ஓடும் ரத்தத்தின் நண்பன்  இளநீர்.

ரத்தத்தை சுத்தம் செய்வதற்கு இன்று இளநீர் பெரிதும் பயன் படுவதால் இதை ரத்தத்தின் நண்பன் என்று கூறுகிறோம். இளநீரில் உள்ள நல்ல கொழுப்பு ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பு அனைத்தையும் அகற்றிவிடுகிறது. ரத்தம் சீராக ஓடுவதற்கு இளநீர் பெரிதும் பயன்படுகின்றது. ரத்தசோகை உள்ளவர்கள் இளநீரை கட்டாயம் சாப்பிடவேண்டும்.

அதுமட்டுமில்லாமல் மூளையை சுறுசுறுப்பாக வைப்பதற்கும், ஞாபக சக்தியை அதிகரிக்கும் இளநீர் அதிகளவு பயன்படுகின்றது.வெயில் காலத்தில் உடல் உஷ்ணம் காரணமாக முகத்தில் பருக்கள் போன்றவை வரும். அதற்கு இளநீரை சாப்பிட்டால் முகப்பருக்கள் வராமல் தடுக்கலாம். இதில் உள்ள சுண்ணாம்பு சத்து பல், எலும்பு ஆகியவற்றை வலுப்படுத்தும். வயிற்றுப்புண்ணை போக்கும்.

Categories

Tech |