Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தாயை பார்க்க சென்ற குடும்பத்தினர்…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தங்க நகையை திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள ஆட்டையாம்பட்டி கிராமத்தில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவர் இரும்பாலையில் இருக்கும் தேசிய வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பரமசிவம் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு திருச்செங்கோட்டில் இருக்கும் தனது தாயை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பிவந்து பார்த்தபோது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 பவுன் தங்க நகை திருடு போனதை கண்டு பரமசிவம் அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து பரமசிவம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மல்லூர் கந்தசாமி கோவில் தெருவில் வசிக்கும் கோகுல்ராஜ் என்பவர் தங்க நகைகளை திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கோகுல்ராஜை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 3 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |