மோசூர் அருகே 2 வயது குழந்தையுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தலைமறைவாக இருந்த கணவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
இராணிப்பேட்டை மாவட்டம், மோசூரில் சென்ற 9ஆம் தேதி ரம்யா அவரது 2 வயது மகள் அஸ்வதியும் தூக்கிட்டு தற்கொலை செய்தனர் . எங்கள் மகளின் தற்கொலையில் சந்தேகம் உள்ளது எனக்கூறி ரம்யாவின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர் . இப்புகாரின் பேரில் தலைமறைவாக இருந்து வந்த ரம்யாவுடைய கணவர், மாமியார் மற்றும் மாமனார் ஆகியோரைத் போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த ரம்யாவின் கணவர் சதீஷ், மாமனார் ராஜேந்திரன் மற்றும் மாமியார் தனலட்சுமி ஆகியவர்களை அரக்கோணம் நகர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள் .