சொத்துக்காக தாயை கொன்ற மகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்திலுள்ள கோ.புதூர் என்னும் பகுதியில் பாப்பம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது பெயரில் சில சொத்துக்கள் இருந்துள்ளன. அதனை அபகரிக்கும் எண்ணத்தில் பாப்பம்மாளின் மகளான நாகேஸ்வரி என்பவர் தனது கணவர் முனியாண்டியுடன் சேர்ந்து அவரை கொலை செய்துள்ளார். இதுகுறித்து புதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த தம்பதியை கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கு பற்றி மதுரை மாவட்ட 4-வது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அந்த விசாரணையின் முடிவில் அவர்கள் இருவருர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நாகேஸ்வரி மற்றும் முனியாண்டி ஆகியோருக்கு நீதிமன்றம் ரூ.5 ஆயிரம் அபராதமும் மற்றும் ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி நாகலட்சுமி தீர்ப்பு வழங்கியுள்ளார்.