மொசாம்பிக்கில் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் தலையை துண்டித்து ஐ.எஸ் போராளிகள் படுகொலை செய்ததாக ‘சேவ் தி சில்ட்ரன்’ அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
கிழக்கு ஆபிரிக்க நாடான மொசாம்பிக்கின் வடக்கு மாகாணமான கபோ டெல்காடாவில் ஐ.எஸ் போராளிகள் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தலை துண்டித்து கொலை செய்கின்றனர். 2017ல் இஸ்லாமிய எழுச்சி தொடங்கப்பட்டதிலிருந்து 2,500க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து7,00,000 பேர் தங்களின் வீடுகளை விட்டும் வெளியேறி உள்ளனர். இச்சம்பவங்கள் குறித்து அப்பகுதியை விட்டு வெளியேறியவர்கள் ‘சேவ் தி சில்ட்ரன்’ அமைப்பிடம் தெரிவித்துள்ளனர்.
அதில் பாதிக்கப்பட்ட தாய் ஒருவர் கூறியதாவது, ‘சம்பவம் அன்று கிராமங்கள் இரவில் தாக்கப்பட்டு ஒவ்வொரு வீடும் தீ வைத்து எரிக்கப்பட்டது.அப்போது அவர் தனது 4 பிள்ளைகளுடன் தப்பிக்க முயன்ற போது அவரின் மூத்த மகனை அந்தப் போராளிகள் தலையை துண்டித்து கண்முன்னே கொன்று விட்டதாக கூறியுள்ளார்’.இதேபோன்று மற்றொரு பெண்ணும் தனது 11 வயது குழந்தை தலை துண்டிக்கப்பட்டு இறந்த துயரத்தை ‘சேவ் தி சில்ட்ரன்’ அமைப்பிடம் தெரிவித்துள்ளார்