பெற்ற தாய், 9 மாத கைக்குழந்தையை அடித்து, துன்புறுத்தும் வீடியோவானது சமூக ஊடகங்களில் பரவி பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள பிரை கமீலா என்ற கிராமத்தில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர், தனது 9 மாத கைக்குழந்தையை அடித்து, துன்புறுத்தும் கொடூர காட்சியானது அவரது உறவினர்ஒருவர் மூலம் படம் பிடித்து வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இதனால் அந்த கொடிய தாயை கைது செய்ய நெட்டிசன்கள் பலர் வற்புறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அந்த வீடியோவில், 9 மாத கைக்குழந்தையை தனது மடியில் வைத்திருக்கும் தாயின் அருகே, மற்றொரு பெண் அமர்ந்திருக்கிறார். இதையடுத்து முதலில் அழுத குழந்தையை பார்த்து, சிரித்த அதன் தாய், திடீரென ஆவேசமடைந்து, இரு கைகளையும் வைத்து கழுத்து பகுதியில் நெருக்கி பிடித்து இறுக்கியுள்ளார். அதன்பின், குழந்தையின் கன்னத்தில் அறைந்துள்ளார்.
இதனால் வலி பொறுக்காமல் குழந்தை அலறுகிறது. இதனால், ஆவேசத்தில் தனது குழந்தை என்றும் எண்ணாமல், அதனை தூக்கி படுக்கையில் வீசி எறிந்துள்ளார். இந்த வீடியோவானது, குழந்தையின் கணவர் கவனத்திற்கு சென்றுள்ளது. இதை தொடர்ந்து அவர், கிராம தலைவருடன் காவல் நிலையத்திற்கு சென்று போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பெண்ணை கைது செய்துள்ளனர். இதையடுத்து குழந்தையை, அதன் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டு, அந்த குழந்தையின் தாயிடம் விசாரணை நடந்து வருகிறது.
This woman has been arrested by the #Samba district police in #Jammu region of #JammuAndKashmir after video emerged of her brutally thrashing and torturing a child. pic.twitter.com/CrzjvTNp6n
— Dr.Satwant Singh Rissam, Ph.D (@satwantrissam) April 11, 2022