Categories
மாவட்ட செய்திகள்

தாம்போதி பாலத்தில் 2 அடி உயரத்திற்கு சூழ்ந்துள்ள மழைநீர்… மாற்றுப்பாதையில் இயக்கப்படும் திருச்செந்தூர், தூத்துக்குடி பேருந்துகள்….!!

ஆத்தூர் அருகே உள்ள தாம்போதி பாலத்தில் மழை வெள்ளம் செல்வதால் திருச்செந்தூர் தூத்துக்குடி வழியாக செல்லும் பஸ்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

ஆறுமுகநேரி, ஆத்தூர்,காயல்பட்டினம், குரும்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் திருச்செந்தூர் தூத்துக்குடி மெயின் ரோட்டில் உள்ள ஆத்தூர் தாம்போதி மேம்பாலம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. இந்த பாலத்தில் சுமார் இரண்டு அடி உயரம் வரை தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

ஆறுமுகநேரியில் இருந்து தூத்துக்குடி வழியாக செல்லும் பேருந்துகள் சேதுக்குவாய்த்தான், ஏரல், முக்காணி ஆகிய பகுதிகளின் வழியாக திருச்செந்தூருக்கு செல்கின்றன.மேலும் திருச்செந்தூருக்கு வரக்கூடிய வாகனங்கள் முக்காணி ரவுண்டானாவில் இருந்து சுற்றி விடப்பட்டுள்ளன.

Categories

Tech |