நெல்லை உழவாரப்பணி குழுமம் சார்பில் நெல்லை நீர்வளம் திட்டத்தின் கீழ் தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணியில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு நெல்லை மாவட்டம் நாரணம்மாள்புரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பணிகள் பற்றியும் தேவையான உதவிகள் குறித்தும் கேட்டறிந்துள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் சந்தித்து பேசிய அவர் நெல்லை நீர்வளம் திட்டத்தின் கீழ் கடந்த எட்டு மாதங்களில் நீர்நிலை பாதுகாக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.
தாமிரபரணி நதிக்கரையில் 58 இடங்களில் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. குளிக்கும் தரத்தில் இருக்கும் தாமிரபரணி நதியை பிடிக்கும் நிறத்திற்கு மாற்றும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் படித்துறைகள் சீரமைக்கும் முயற்சியில் மேற்கொள்ளப்படுகின்றது. தாமிரபரணி நதியில் சோப்பு, ரசாயன பொருட்கள் மற்றும் மக்காத பொருட்கள் பயன்படுத்துவதை தடை செய்யப்படும். மேலும் தாமிரபரணி நதியில் சுத்தம் செய்யப்படும் பகுதிகளில் விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். நதியில் வாகனங்களை சுத்தம் செய்வதற்கு தடை விதித்து குற்ற விசாரணை சட்டம் 133 மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டம் போன்றவை தற்போது வரை நடைமுறையில் இருக்கிறது.
மீண்டும் அந்த சட்டங்களின் மூலமாக அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளை உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக அமல்படுத்தப்பட்டு விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் தாமிரபரணி நதியை சுத்தம் செய்து முன்மாதிரியான பகுதிகளாக மாற்ற பாபநாசம், கள்ளிடைகுறிச்சி, சுத்தமல்லி, சேரன்மகாதேவி போன்ற ஐந்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மிக விரைவில் நெல்லை மாநகர பகுதிகளில் நடந்து வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நிறைவு பெறும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.