மேற்குவங்கத்தில் தாமரை மலரும் வரை நான் தூங்க மாட்டேன் என சுவேந்து அதிகாரி கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் முக்கிய அமைச்சராக இருந்தவர் சுவேந்து அதிகாரி. இவர் திரிணாமுல் காங்கிரசில் இருந்து தன்னுடைய பதவியை ராஜினாமா செய்த பின்ன,ர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இவர் தற்போது பாஜகவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் பாஜக பிரச்சார கூட்டத்தில் சுவேந்து அதிகாரி பேசியுள்ளார்.
அப்போது, “இங்கே திரிணாமுல் காங்கிரஸ் காரர்கள் யாராவது இருந்தால் ஓடி விடுங்கள்” என்று கூறியுள்ளார். மேலும் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் சுனாமி அலை எழும் என ஆவேசமாக பேசியுள்ளார். மேலும் அவர் மேற்கு வங்கத்தில் தாமரையை மலர செய்யும் வரை நான் தூங்கவே மாட்டேன் என்றும், மக்கள் திரிணாமுல் காங் வேரோடு பறிக்க தயாராகி விட்டார்கள் என்றும் பேசியுள்ளார்.