தான்சானியாவில் 43 பேருடன் சென்ற பயணிகள் விமானம் ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமான நிலையத்துக்கு 100 மீட்டர் முன்னதாக பிரிஷிஷியன் விமானம் ஏரிக்குள் விழுந்தது. தான்சானியா தலைநகர் தார்-எஸ்- சலாமில் இருந்து புகோபா நகருக்கு சென்றபோது விபத்தில் சிக்கியது பிரிஷிஷியன் விமானம். விமானத்தில் பயணித்தவர்களில் 26 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியவர்களை தேடும் பணி நடைபெறுகிறது. தொடர்ந்து மீட்பு பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
https://twitter.com/KaustuvaRGupta/status/1589188610838138880