Categories
உலக செய்திகள்

தான்சானியாவில் முதல் பெண் அதிபர்… பொறுப்பேற்பு..!!

ஆப்பிரிக்க நாடான தான்சானியாவின் முதல் பெண் அதிபராக சமியா சுலுஹி ஹசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஆப்பிரிக்க நாடான தன்சானியாவில் 2015ஆம் ஆண்டு முதல் அதிபராக இருந்தவர் ஜான் மாகுபுலி. இவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானதாக பல வதந்திகள் பரவி வந்த நிலையில் கடந்த புதன்கிழமை இருதய நோய் காரணமாக உயிரிழந்தார். தான்சானியா நாட்டின் அரசியல் சாசனத்தின்படி பதவியில் இருக்கும்போது அதிபர் இறந்துவிட்டால், துணை அதிபர் அதிபர் பதவி ஏற்பார்.

அந்நாட்டின் துணை அதிபரான சமியா சுலுகு ஹசன், நேற்று தான்சானியாவின் 6-வது அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார். மேலும் இவர்தான் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை பெறுகிறார். டார் எஸ் சலாம் நகரில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சமியா சுலுகு ஹசன்  ஒரு குரானை வைத்துக்கொண்டு நாட்டின் அரசியலமைப்பை பாதுகாப்பேன் என்று உறுதியளித்து பதவியேற்றார். பதவி விழாவில் தலைமை நீதிபதி, மந்திரிகள் மற்றும் அந்நாட்டின் முன்னாள் அதிபர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |