இரும்பு கம்பி குத்தியதால் தொழிலாளி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி பகுதியில் தென்னை மரம் ஏறும் தொழிலாளியான நாகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வலிப்பு நோய் இருக்கிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாகேந்திரன் குட்லாடம்பட்டி மந்தையில் இருக்கும் ஜெயம் என்பவரது கறிக்கடைக்கு அருகில் நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென வலிப்பு ஏற்பட்டதால் நாகேந்திரன் தனது இருசக்கர வாகனத்தில் இருந்த இரும்பு கம்பியின் ஒரு பகுதியை பிடித்துள்ளார்.
அப்போது இருசக்கர வாகனம் கீழே விழுந்ததால் அதில் கட்டியிருந்த தென்னை மரம் ஏறும் மிஷினில் உள்ள இரும்பு கம்பி நாகேந்திரனின் தாடையில் குத்தியது. இதனால் படுகாயமடைந்த நாகேந்திரனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நாகேந்திரன் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.