சிவ சேனா கட்சி கடந்த ஜூன் மாதம் மிகப்பெரிய பிளவை சந்தித்துள்ளது அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏக் நாத் ஷிண்டே உத்தவ் தாக்கரேக்கு எதிராக கட்சியை உடைத்துள்ளார். மொத்தம் உள்ள 56 எம்எல்ஏக்களில் அவருக்கு 40 பேர் ஆதரவளித்துள்ளனர் இதன் காரணமாக ஏக் நாத் பா ஜனதாவுடன் கூட்டணி அமைத்து முதல் மந்திரி ஆகியுள்ளார். சிவசேனாவின் 18 எம்பிக்களில் 12 பேரும் ஹிண்டே பக்கம் இருக்கின்றனர் இது தவிர தானே உள்ளிட்ட சில மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலர்களுக்கும் ஹிண்டேக்கு ஆதரவாக இருக்கின்றனர். உத்தவ் தாக்கரை அணிக்கு உள்ள எம் பி எம் எல் ஏக்கள் ஆதரவை ஹிண்டே அணியுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது குறைவாகவே இருக்கிறது.
அதே சமயம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உத்தவ் தாக்கரே வசம் அதிகம் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தில் யார் உண்மையான சிவசேனா என்பது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது சமீபத்தில் தேர்தல் ஆணையம் சிவசேனாவின் பெயர் மற்றும் சின்னத்தை முடக்கியது. மேலும் உத்தவ், ஹிண்டே அணிக்கு தனித்தனி பெயர் சின்னத்தை வழங்கியது. இந்த நிலையில் தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்பதை நிரூபிக்க உத்தவ் தாக்கரே அணியினர் இரண்டு லாரிகளில் பிரமாண பத்திரங்கள் ஆவணங்களை கொண்டு சென்று தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்திருக்கின்றனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக தேர்தல் ஆணைய விவகாரங்களை கவனித்து வரும் உத்தவ் தாக்கரே சிவசேனாவின் மூத்த தலைவர் அணில் தேசாய் பேசும்போது கட்சியினர் சுமார் 11 லட்சம் உறுப்பினர் படிவங்களை சேகரித்தனர். ஆனால் இந்த படிவங்கள் எப்படி இருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் பல நிபந்தனைகளை விதித்து இருக்கிறது. அதனால் 8 1/2 லட்சம் உறுப்பினர் படிவங்களையும் 2.62 லட்சம் நிர்வாகிகளின் பிரமாண பத்திரங்களையும் தாக்கல் செய்திருக்கிறோம். மேலும் சில மாவட்டங்களுக்கான பிரம்மாண்ட பத்திரங்களை தாக்கல் செய்ய இருக்கிறோம் என கூறியுள்ளார்.