ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த குரங்குகளை வனத்துறையினர் பிடித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மலையடிபுதூர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அருகில் இருக்கும் குரங்குகள் புகுந்து சிறுவர், சிறுமிகளை அச்சுறுத்துவது மட்டும் இல்லாமல் வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் குரங்குகளை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனையடுத்து வனத்துறையினர் குரங்குகளை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது சிக்கிய 5 குரங்குகளை பிடித்துள்ளனர். அதன் பின்னர் அந்த குரங்குகளை வனத்துறையினர் மணிமுத்தாறு மலையில் கொண்டு விட்டுள்ளனர்.