Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தாகத்துடன் வந்த சிறுவன்…. “தின்னர்” குடித்ததால் நடந்த சோகம்…. கதறி அழுத பெற்றோர்….!!

குடிநீர் என நினைத்து தின்னரை குடித்த 5-ஆம் வகுப்பு சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் வில்லாபுரம் மீனாட்சி நகரில் வசித்து வரும் முகமது யூசுப் என்பவருக்கு ஹபீஸ்முகமது (9) என்ற மகன் உள்ளார். 5-ம் வகுப்பு படித்து வந்த ஹபீஸ்முகமது சம்பவத்தன்று வெளியில் விளையாடிவிட்டு தாகத்துடன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்த தின்னர் என்ற ரசாயன திரவத்தை குடிநீர் என நினைத்து குடித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து ஹபீஸ்முகமது திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனடியாக மகனை அழைத்துக்கொண்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக இறந்துள்ளார். இச்சம்பவம் குறித்து அவனியாபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |